Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் வாங்குபவருக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பென்ஷன் வாங்குவோருக்கு மத்திய பென்ஷன் விநியோக அமைப்பை உருவாக்குவதற்கு EPFO நிறுவனம் பரிசு வைத்து வருகின்றது. வருகின்ற ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் EPFO அறங்காவலர் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் மத்திய பென்ஷன் விநியோக அமைப்பை உருவாக்குவது பற்றி பரிசளித்து அனுமதி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. மத்திய பென்ஷன் விநியோக அமைப்பால் ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு பயன்கள் கிடைக்கும். நாடு முழுவதும் சுமார் 73 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் பெற்று வருகிறார்கள்.

அவர்களுக்கு தற்போது EPFO நிறுவனத்தின் 138 மண்டல அலுவலகங்கள் மூலமாக தனித்தனியாக பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியதாரர்களுக்கு வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு நேரங்களில் பென்ஷன் வரும். ஆனால் இந்த புதிய மத்திய பென்ஷன் விநியோக அமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு அனைவருக்கும் மொத்தமாக ஒரே நாளில் பென்ஷன் வந்து சேரும். அதாவது மத்திய பென்ஷன் விநியோக அமைப்பின் மூலமாக நாடு முழுவதும் 73 லட்சம் EPFO பென்ஷன் தாரர்களின் வங்கி கணக்குகளில் ஒரே நாளில் மொத்தமாக ஓய்வூதியம் செலுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு ஓய்வூதியதாரர்கள் மத்தியில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |