இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களின் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். இதற்கு இப்போது இருந்தே நீங்கள் தயாராக வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்காமல் உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்குவதற்கு பென்சன் திட்டம் உதவியாக இருக்கும்.
இவ்வாறு பென்ஷன் வாங்கும் நபர்களுக்கு பென்ஷன் தொகை அனுப்பப்பட்ட பிறகு அவர்களுக்கு செல்போனில் எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலம் பென்ஷன் வாங்கியதற்கான ரசீது அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் பென்ஷன் வாங்கும் நபர்களுக்கு வாட்ஸ் அப்பிலும் பென்ஷன் ரசீதை அனுப்பும்படி வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எஸ்எம்எஸ்,இ-மெயில் மட்டும் அல்லாமல் இனி வாட்ஸ் அப்பிலும் பென்ஷன் ரசீதை வங்கிகள் அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் ரசீதில் பென்ஷனுக்கான தொகை, வரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெளிவாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.