பென்ஷன் வாங்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதை தெரிவிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழ் என்ற ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம். இது ஜீவன் பிரமாண பத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பத்திரத்தை பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் மாத இறுதியில் சமர்ப்பிக்க வேண்டும். கொரோனா மற்றும் மழை போன்ற பிரச்சனைகளால் மூத்த குடிமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கருதி மத்திய அரசு தற்போது புதிய சலுகை வழங்கியுள்ளது.
அதாவது ஆய்வு ரிசார்ட்டுகள் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது மிக எளிதாகிவிட்டது. வங்கிக் கிளைக்கு போகத் தேவையில்லை. தபால்காரர் மூலமாக வீட்டிற்க்கே வந்து ஆய்வு சான்றிதழ் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வீட்டில் அமர்ந்தபடியே வீடியோ கால் மூலமாக ஆய்வு செய்தால் சமர்ப்பிக்கும் வசதியும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பொது சேவை மையங்களில் கூட ஆயுள் சேட்டைகளை சமர்ப்பிக்கலாம். எனவே டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பென்சனர் இந்த வேலையை முடிக்க வேண்டும். இல்லையென்றால் பென்சன் தொகை வருவதில் சிக்கல் ஏற்படலாம்.