பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். அது தற்போது மிக எளிதாகிவிட்டது. போஸ்ட் ஆபீஸ் மூலமாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். தபால்காரர் உங்கள் வீடு தேடி வந்து ஆயுள் சான்றிதழை வாங்கி செல்வார். மேலும் வங்கிகளும் இந்த சேவையை வழங்கி வருகின்றது. doorstepbanks.com அல்லது www.dsb.imfast.co.in/doorstep/
மேலும் Doorstep Banking மொபைல் ஆப்பையும் பயன்படுத்தி ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க முடியும். 18001213721 மற்றும் 18001037188 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்தாண்டு ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக செய்திருந்தால் தான் பென்ஷன் தொகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.