மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள், வாரிய ஊழியர்கள், தன்னாட்சி அமைப்புகளை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் உள்ளிட்ட பணி ஓய்வு பெற்றவர்களுக்கு 7 ஆம் சம்பள கமிஷன் அடிப்படையில் இனி பென்ஷன் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதன்படி பென்ஷன் வாங்குவோருக்கு வழங்கப்படும் படித்தொகை உயரும். ராஜஸ்தான் மாநில அரசின் இந்த அறிவிப்பால் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பென்ஷனர்கள் பயனடைவார்கள். இந்தத் திருத்தப்பட்ட புதிய பென்சன் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Categories