இந்தியாவில் தேசிய பென்ஷன் திட்டத்தை பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் நிர்வகித்து வருகிறது.முதலில் இந்த திட்டம் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே கொண்டுவரப்பட்ட நிலையில் பின்னர் தனியார் ஊழியர்களுக்கும் இந்த திட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.இந்த தேசிய பென்ஷன் திட்டத்தில் உங்களின் பணம் பங்குச்சந்தை மற்றும் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படும்.பணி ஓய்வு பெறும்போது இந்த திட்டத்தின் கணக்கில் உள்ள நிதியில் 60% வரை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
மீதமுள்ள தொகையை ஆண்டு தொகையாக வாங்க வேண்டும். இதன் மூலமாக மாதந்தோறும் பென்ஷன் கிடைக்கும்.இருந்தாலும் இதுவரை பணி ஓய்வு பெறும்போது ஆண்டு தொகை சேவையை வாங்குவதற்கு தனியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.அப்படி செய்தால்தான் பென்ஷன் கிடைக்கும் என இருந்த நிலையில் இந்த விதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.
அதாவது தேசிய பென்ஷன் திட்டத்திலிருந்து வெளியேறுவதற்கான படிவமே இனி இதற்கு போதுமானது.ஆண்டு தொகையை வாங்குவதற்கு தனியாக படிவம் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.அதுமட்டுமல்லாமல் தேசிய பென்ஷன் திட்ட பயனாளிகள் ஓய்வூதியம் பெரும் காலத்தில் டிஜிட்டல் முறையிலேயே வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்.