Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி வீட்டில் இருந்தபடியே…. வெளியான அசத்தல் அறிவிப்பு…..!!!!

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி தனது ஓய்வூதியதாரர்களுக்கு வீடியோ வாழ்நாள் சான்றிதழ் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக மிக எளிதில் ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க முடியும். அனைவரும் கட்டாயம் ஒவ்வொரு வருடமும் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பது அவசியம். அப்படி சமர்ப்பித்தால் மட்டுமே பென்ஷன் தொடர்ந்து வரும். இந்நிலையில் பேங்க் ஆப் பரோடா வங்கி ஓய்வூதியதாரர்களுக்கு வீடியோ வாழ்நாள் சான்றிதழ் சேவையை அறிமுகம் செய்துள்ள நிலையில் ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே வீடியோ கால் செய்து வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்து கொள்ளலாம்.

இதற்கு முதலில் பாங்க் ஆப் பரோடா வங்கியின் பென்ஷன் சாராதி இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் பிபிஓ எண்மற்றும் வங்கி கணக்கு ஏன் பயன்படுத்தி உள்ளே நுழைந்த பிறகு மொபைலுக்கு வரும் ஓடிபி பதிவிட்டு நுழைய வேண்டும். அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து பின்னர் வீடியோ காலுக்கான நேரத்தை தேர்வு செய்து வீடியோ காலில் நீங்கள் ஆதார் அல்லது வேறு ஏதேனும் போட்டோ அடையாள அட்டையை காட்ட வேண்டும். பின்னர் வங்கி அதிகாரி வீடியோவில் வந்தவுடன் அவரிடம் போட்டோ அடையாள அட்டையை காட்ட வேண்டும்.பின்னர் உங்கள் படம் எடுக்கப்பட்ட பிறகு மொபைலுக்கு வரும் ஓடிபி வீடியோ காலில் தெரிவித்தவுடன் உங்களின் வாழ்நாள் சான்றிதழ் தயாராகிவிடும்.

Categories

Tech |