Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது ரொம்ப ஈஸி…. இதோ உடனே பாருங்க….!!!!

நாடு முழுவதும் பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் வருடத்தில் ஒருமுறை தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். அவ்வாறு சமர்ப்பித்தால் மட்டுமே பென்ஷன் தொடர்ச்சியாக வந்து சேரும். நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை ஓய்வூதியத்தாளர்கள் அனைவரும் முடிக்க வேண்டும். மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர் மூலமாக அவர்களின் வீட்டிற்க்கே சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் சேவையை இந்திய அஞ்சல் துறை வழங்கி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் சிரமம் படுவதால் அதனை தவிர்க்கும் விதமாக ஜீவன் பிரமாணம் திட்டத்தின் மூலமாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே கைவிரல் ரேகையை பயன்படுத்தி டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு ஓய்வூதியதாரர்கள் தங்களின் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண் , PPO எண்மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்கள் அனைத்தையும் தெரிவித்து கைவிரல் ரேகையை பதிவு செய்தால் மட்டும் போதும் ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்து விடலாம். இதற்கு நீங்கள் 70 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே மத்திய அரசு ஓய்வூதியத்தாளர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியத்தாளர்கள் இந்த வசதியை பயன்படுத்தி வீட்டில் இருந்து கொண்டே தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.

Categories

Tech |