Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் விதிமுறைகள் திடீர் மாற்றம்…. புது ரூல்ஸ் என்ன தெரியுமா?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய பென்ஷன் திட்டம் தொடர்பான விதிமுறைகளை திருத்தி அமைத்து மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தேசிய பென்ஷன் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பான விதிமுறைகள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தேசிய பென்ஷன் திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் அரசு ஊழியர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி வந்த நிலையில் பிறகு தனியார்துறை ஊழியர்களும் முதலீடு செய்ய அனுமதிக்கப் பட்டார்கள்.

இந்தத் திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்தால் பணி ஓய்வின் போது மொத்த நிதியில் குறிப்பிட்ட பகுதியை எடுத்துக் கொண்டு மீதி தொகையை மாதந்தோறும் ஊழியர்கள் பென்ஷனாக பெற முடியும். இதில் Tier 1, Tier 2 என இரண்டு வகையான தேசிய பென்ஷன் திட்ட கணக்குகள் உள்ளது. இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் நிதியில் அதிகபட்சமாக 50 சதவீதம் வரை பங்கு சந்தை முதலீட்டிற்கு ஒதுக்கிக் கொள்ள முடியும். இதுபோக மீதமுள்ள தொகையை அரசு பத்திரங்கள் மற்றும் கார்ப்பரேட் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.

இதுவரை தேசிய பென்ஷன் திட்ட கணக்கில் நிதி ஒதுக்கீட்டை வருடத்திற்கு இரண்டு முறை மாற்றிக் கொள்ளலாம். இந்த நிலையில் விதிமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இனி வருடத்திற்கு நான்கு முறை உங்களது நிதி ஒதுக்கீட்டை மாற்றிக்கொள்ள முடியும். இது tier 1 கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். இருந்தாலும் பெண் சந்நிதி நிர்வாகியை வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும்.

Categories

Tech |