சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதிமுக 50 வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
அதில் பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக அதிமுக அலுவலகத்திற்கு எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.