முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. இவர் அதிமுகவினை கைப்பற்றவும், அதிமுகவில் இணையவும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். ஆனால் அவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து விடுகிறது. இவ்வாறு அரசியலில் தான் எடுக்கும் அத்தனை முடிவுகளும் தோல்வியில் முடிவதால் ஜோதிட ஆலோசனை படி தன் பெயரை மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி தனது தாய், தந்தை பெயரை தன் பெயருக்கு முன்னால் போட்டு வருவதை தவிர்த்து (வி கே சசிகலா) கணவர் நடராஜன் பெயரை சேர்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் தான் வசித்து வரும் வீட்டில் வாஸ்து தோஷம் இருப்பதால் வேறு வீட்டுக்கு மாறவும் சசிகலா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவலை சசிகலா தரப்பினர் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.