என்.டி.ஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் பெயரை ஆந்திர முதல்வர் சூட்டியுள்ளார்.
தெலுங்கு தேச கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமராவால் 1986 ஆம் வருடம் என்.டி.ஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்திற்கு ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் பெயரை ஆந்திரா பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சூட்டியுள்ளார்.
இதற்கு ஜூனியர் என்டிஆர் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, என்.டி.ஆர் மற்றும் ஒய்.எஸ்.ஆர் இருவரும் மிகவும் பிரபலமான தலைவர்கள் ஒருவரின் பெயரை எடுத்துக் கொண்டு மற்றொருவரின் பெயரை சூட்டினால் ஒய்.எஸ்.ஆரின் மரியாதை அளவை உயர்த்தாது. மேலும் என்.டி.ஆரின் அளவை குறைக்காது. பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவதன் மூலம் என்.டி.ஆர் சம்பாதித்த புகழையும் தெலுங்கு தேச வரலாற்றில் அவரது அந்தஸ்தையும் தெலுங்கு மக்களின் இதயங்களில் அவரது நினைவுகளையும் அளிக்க முடியாது என கூறியுள்ளார்.