Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெயர் போடாததால் ஏற்பட்ட முன்விரோதம்…. பெயிண்டருக்கு சரமாரி குத்து…. போலீஸ் விசாரணை….!!

சித்தப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி கிராமத்தில் பெயிண்டனரான  முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும்  அண்ணன் தங்கராஜ் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே திருமண பத்திரிக்கையில் பெயர் போடாததால் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முருகேசன் வேதாரண்யம் சாலையில் பணியாளர்களுடன் சேர்ந்து பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகேசனின் அண்ணன் மகன் சதீஷ் முருகேசனிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

மேலும் ஆத்திரமடைந்த  சதீஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு முருகேசனின் நெஞ்சில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த முருகேசனை அருகில் இருந்தவர்கள்  மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு முருகேசனை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |