நேற்று அரசு ஊழியர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் தபால் ஓட்டு போடத்தொடங்கினர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மொத்தம் 3,916 அரசு ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கு நேற்று நடந்த பயிற்சி வகுப்பில் தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டது. மேலும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள 816 காவல்துறையினருக்கும், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள 531 காவல்துறையினருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அரியலூரில் பணியாற்றக்கூடிய 146 காவல்துறையினருக்கும், பிற மாவட்டங்களில் பணியாற்றக்கூடிய பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும், தேர்தலின்போது பணியாற்றக்கூடிய 72 மண்டல அலுவலர்களுக்கும் தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் சட்டமன்ற தேர்தல் அன்று பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு நேற்றுமுதல் தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டது. இதனை முன்னிட்டு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்ற இடங்களில் தபால் ஓட்டு அளிப்பதற்காக தனி அறை அமைக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் அரசு ஊழியர்கள் சீல் வைக்கப்பட்ட பெட்களில் தபால் ஓட்டுகளை போட்டனர். முதல் நாளான நேற்று குன்னம் தொகுதியில் 186 பேரும், பெரம்பலூர் தொகுதியில் 128 பேரும் என மொத்தம் 314 பேர் தபால் ஓட்டுகள் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.