பெரம்பலூரிள்ள பள்ளி ஒன்றில் கழிவறைகள் கட்டி தர கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றதில் பொதுமக்கள் பலரும் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக தந்தனர். அதில் குன்னம் தாலுகா வேப்பூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட கீழப்பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் மேலாண்மை குழுவினர் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்காமல் இருக்க மேடாக்க வேண்டும் எனவும் போதிய கழிவறைகள் கட்டி கொடுக்க வேண்டும் எனவும் பழுதான கட்டிடங்களை பழுது நீக்கி தர வேண்டும் எனவும் கூறியிருந்தனர். மேலும் சென்ற கல்வி வருடத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் ஆட்சியர் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறியிருந்தார்கள்.