Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 8-ஆம் தேதி வரை 2 ஆயிரத்து 330 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 2,290 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 21 பேர் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் புதிதாக 5 பேருக்கு பெரம்பலூர் வட்டாரத்தில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 24 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மருத்துவ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |