பெரம்பலூரில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 14 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,384 ஆக அதிகரித்துள்ளது. அதில் ஏற்கனவே 22 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,309 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 53 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மருத்துவ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.