Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் வாகன சோதனை… ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்டவை… பறக்கும் படை அதிரடி பறிமுதல்..!!

பெரம்பலூர் குன்னம் சட்டமன்ற தொகுதியில் வாகன சோதனையின்போது ஆவணம் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 68,600 பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது என்று தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்டையன்குடிகாடு கிராமத்தில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த வாகன சோதனை வட்ட வழங்கல் அலுவலர் திலகவதி தலைமையில் நடைபெற்றது. அந்த வழியாக அந்த அனைத்து வாகனங்களையும் தொடர்ந்து கண்காணித்து கொண்டே வந்தனர்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது. அதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராயபுரம் கிராமத்தில் வசித்து வரும் சிவராஜ் ஜாட் என்பது தெரியவந்தது. மேலும் அவர் ஆவணங்கள் இல்லாமல் ரூ.68 ஆயிரத்து 600 பணம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். அதன் பின் அந்த பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

Categories

Tech |