Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் வாகன சோதனை… ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றவை… பறக்கும் படை அதிரடி பறிமுதல்..!!

பெரம்பலூரில் ஆவணம் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையின்போது பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பில்லாங்குளம் அருகே தேர்தல் பறக்கும் படையினர், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், போலீஸார் புவனேஸ்வரி, பன்னீர்செல்வம் ஆகியோர் துணை தாசில்தார் பாக்யராஜ் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் ஆவணம் இல்லாமல் ரூ.2 லட்சம் பணம் கொண்டு செல்வது தெரியவந்தது.

இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாமனந்தல் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வரும் விஜயன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த ஆவணம் இல்லாத அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் பின் அந்த பணம் பெரம்பலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

Categories

Tech |