பெரம்பலூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் பேருக்கு இதுவரை கொரானா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 2,305 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 2,280 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் பெரம்பலூரில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மேலும் ஒருவருக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது பெரம்பலூர் அரசு மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சை மருத்துவமனைகளில் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர், அலுவலர்கள், சுகாதாரத்துறையினர், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 20 ஆயிரத்து 8 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.