Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் மாவட்ட தொகுதிகளில்… சூறாவளி போல் தொடங்கியது… நேற்று இரவுடன் ஓய்ந்தது..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் சூறாவளி போல் தொடங்கிய பிரச்சாரம் நேற்று இரவு 7 மணியுடன் ஓய்ந்தது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் 22 வேட்பாளர்களும், பெரம்பலூர் தொகுதியில் 9 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். அனைத்து வேட்பாளர்களும் தேர்தலை முன்னிட்டு வீதி, வீதியாக சென்றும், துண்டுப்பிரசுரங்களை வழங்கியும் பொது மக்களிடையே சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகரன் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலும், அதிமுக வேட்பாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் பேருந்து நிலையத்திலும் தங்களது பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.

குன்னம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் செந்துறை கிராமத்திலும், அதிமுக வேட்பாளர் இராமச்சந்திரனும் செந்துறை கிராமத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். குன்னம் அருகே உள்ள கீழப்புலியூர் கிராமத்தில் குன்னம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளரான திரைப்பட இயக்குனர் கவுதமன் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

Categories

Tech |