Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெரியவரே..! வேண்டாம் அப்படி பண்ணாதீங்க… அதிர வைத்த முதியவர் செயல்… எழும்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு …!!

சென்னை எழும்பூரின் ரயில்வே நிலையத்தில் முதியவர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையின் எழும்பூர் ரயில் நிலையத்தின் வளாகத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்டர் கட்டிட மாடியில் ஒரு முதியவர் அவசரமாக ஏற முயற்சி செய்துள்ளார். இதைக்கண்ட பயணிகள் அனைவரும் ஏறாதீர்கள் என்று கூச்சலிட்டுள்ளனர். எனினும் கட்டிடத்தின் மீது அந்த முதியவர் வேகமாக ஏறியுள்ளார். இதனால் உடனடியாக எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதற்குள் அந்த முதியவர் கட்டிடத்திலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் அந்த முதியவர் படுகாயமடைந்துள்ளார். அதன் பின்பு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்து பார்த்தவிட்டு அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். அதன்பின்பு காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |