பெரியார் சிலையை உடைக்கும் நிலைக்கு பாமகவினர் சென்றது வேதனை அளிக்கிறது என விடுதலைக் கட்சி திருமாவளவன் தெரிவித்துள்ளார்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாமக எந்த திசை வழியில் பயணிக்கிறது என்று தெரிகிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,
“பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக பாமக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டு இருப்பதன் மூலம் பாமக எந்த திசையில் பயணிக்கிறது அல்லது அதன் தொண்டர்கள் எந்த வகையில் இப்போது உறவாடி கொண்டிருக்கிறார்கள் இதனால் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்விகள் எழுகின்றன. பெரியாரின் பெயரில் கொள்கை கோட்பாடுகளை வரவேற்பதாக சொல்லி இத்தனை ஆண்டுகளில் இயக்கம் நடத்திய பாமக இன்று பெரியார் சிலையை உடைக்கும் நிலைக்குப் போய் உள்ளது அதற்கு காரணம் கூடா நட்பு என்பது தான்