Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பெரியார் பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வில் ஜாதி பற்றி கேட்கப்பட்ட கேள்வி”…. பெரும் பரபரப்பு…!!!!

பெரியார் பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வில் ஜாதி பற்றி கேட்கப்பட்ட கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வானது நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதுகலை வரலாறு முதலாம் ஆண்டு தேர்வில் 1880 ஆம் வருடம் முதல் 1947 ஆம் வருடம் வரையிலான தமிழகத்தின் சுதந்திர தருணம் குறித்த பிரிவில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளில் பதினொன்றாவது கேள்வியாக “தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட ஜாதி எது?” என கேள்வி கேட்கப்பட்டு நான்கு பதில்களும் கொடுக்கப்பட்டு அதில் ஒன்று தேர்வு செய்யும்படி இருந்தது.

இந்நிலையில் இது தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள்  உட்பட பலர் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. ஜாதியை ஒழிக்க போராடிய பெரியார் பெயரை கொண்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இது போன்ற கேள்வி கேட்பதா என்ற கண்டனத்தையும் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் உயர்கல்வித்துறை இது குறித்து முறையான விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.

Categories

Tech |