Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பெரியார் பல்கலைக்கழக அளவிலான போட்டிகள்”…. சேலம் அரசு கல்லூரி மாணவிகள் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!!

நாமக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் பெரியார் பல்கலைக்கழக அளவில் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இலையில் சேலம் அரசு பெண்கள் கலை கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். அதாவது மாணவி மீனாட்சி, 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும், தொடர் ஓட்டத்தில் வெண்கல பதக்கமும், மனோன்மணி 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், சரண்யா 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கமும், ஹெப்சி ஜோஸ்பின் 21 கிலோமீட்டர் நடை ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர். மேலும் மீனாட்சி, காட்சிலா, பாஞ்சாலி, மனோன்மணி ஆகியோர் தொடர் ஓட்ட போட்டியிலும் கலந்து கொண்டு வெண்கல பதக்கத்தை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி முதல்வர் கீதா, பேராசிரியர்கள் உட்பட பலரும் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |