பெரியார் பிறந்த நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் பற்றி அவதுறாக பேசிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை முன்பு பெரியார் பிறந்த நாள் விழா நடைபெற்றுள்ளது. இதில் ஆதிதமிழர் கட்சியினர் பலரும் பங்கேற்றுள்ளனர். அப்போது விழாவில் பேசிய கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் அவர்கள் மாவட்ட ஆட்சியரை குறித்து அவதுறாக பேசியுள்ளார் என கூறப்படுகின்றது.
இதுகுறித்து சூரங்கோட்டை கிராம நிர்வாக அதிகாரி முத்தையா ராமநாதபுரம் பஜார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ஆதி தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் மற்றும் விழாவை ஏற்பாடு செய்த பெரியார் பேரவையின் நிர்வாகி நாகேஸ்வரன் ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.