புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக மால்கள், தியேட்டர்கள் பெரிய கடைகள் அனைத்தும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்றுப் பரவுவதை கட்டுப்படுத்த தற்போது இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பெரிய கடைகள், வணிக வளாகங்கள், மால்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் உள்ளிட்டவை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பெரிய கடைகள், மால்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் ஓட்டல்களில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரசின் மறு அறிவிப்பு வரும் வரை உத்தரவு அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.