Categories
மாநில செய்திகள்

பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை… தமிழக அரசு உத்தரவு..!!

தமிழகத்தில் பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசும் சுகாதாரத் துறையும் கலந்து ஆலோசனை செய்து மேலும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது. அதில் பெரிய கடைகள், வணிக வளாகங்கள் போன்றவை இயங்க அனுமதி இல்லை என்ற அறிவிப்பையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் வியாபாரிகளின் நிலை பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Categories

Tech |