பேபி கேரட் காய்கறி வகைகளில் மிகவும் சுவையான ஒன்று. இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பேபி கேரட் சாப்பிடுவதால் நமது உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை குறித்து இதில் நாம் பார்க்கப் போகிறோம்.
பேபி கேரட் என்பது ஒரு வகை காய்கறி. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு காய்கறி. இதில் ஏராளமான ஊட்டச் சத்தும் நிறைந்துள்ளது. பேபி கேரட் சிறியதாக இருந்தாலும் சுவைப்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். சுமார் 1980 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு தான் இந்த கேரட்டை அனைவரும் விரும்பி சாப்பிட ஆரம்பித்தனர். இதில் அதிக அளவு கரோட்டின் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளது.
வேகவைத்த கேரட் 35 முதல் 39 கிளைசெமிக் குறியீடு உள்ளது. ப்ரோக்கோலி மற்றும் பச்சைப் பீன்ஸ் கிளைசமிக் குறியீட்டு விட இது சற்று அதிகம். இதை நாம் சாப்பிட்டு வந்தால் நமது கண்களில் ஏற்படும் பிரச்சினைகள் குணமாகிறது. ஏனெனில் இதில் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இந்த கேரட் மிகவும் உகந்ததாக உள்ளது. இதயநோய்கள் அபாயத்தை குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோயை உருவாக்கக்கூடிய செல்களை இது தடுக்கின்றது. குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றை வர விடாமல் தடுக்கின்றது. பற்கள் ஆரோக்கியமாக இருக்க பேபி கேரட்டை நாம் சாப்பிடுவது நல்லது.
குழந்தைகளுக்கு இந்த கேரட்டை நாம் கொடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும். கேரட் சாப்பிடுவது உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தினால் அதன் விளைவுகள் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஏற்படும். ஒவ்வாமை ஏற்பட்டால் மருத்துவரை அணுகி அதற்கான தீர்வு காணுங்கள்.