Categories
ஆன்மிகம் கோவில்கள்

“பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா” ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.மேட்டுப்பாளையம் பகுதியில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று திருவிழா நடைபெற்றதால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டனர். இதனையடுத்து கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடனை செலுத்தியுள்ளனர். இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் நித்யா, பரம்பரை அறங்காவலர் மற்றும் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர்.

Categories

Tech |