பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வரும் 1-ஆம் தேதிக்கு பின்னர் தயாரிக்கப்படும் பெரிய கார்களில் 6 காற்றுப் பைகள் இருப்பது கட்டாயமாக்கப்படுகிறது என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுபற்றி மத்திய அரசு வெள்ளிக்கிழமை விரைவு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டரில் பதிவு செய்துள்ள பல்வேறு பதிவுகளில், ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் ஓட்டுநர் இருக்கைக்கு காற்றுப் பை பொருத்துவதை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது.
இதையடுத்து ஓட்டுனர் தவிர முன்னிருக்கையில் அமர்ந்து செல்லும் நபருக்கும் காற்றுப் பை பொருத்துவதை 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் m1 வகை வாகனங்கள் அனைத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டது. மேலும் மோட்டார் வாகனங்களில் பயணம் செய்பவரின் பாதுகாப்பை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டு மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 -இல் நிறுத்தப்பட்டுள்ளன. 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதிக்கு பின்னர் தயாரிக்கப்பட்ட m1 வகை வாகனங்களில் பக்கவாட்டில் 2 காற்றுப் பைகள் பொருத்துவதை கட்டாயமாகும் வரைவு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.