Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரிய வட்டிக்காரனா இருக்கான் ? மாசம் 14கோடி கட்டுறோம்… சண்டை போட்ட துரைமுருகன் ?

தமிழக சட்டசபையில் பேசிய துரைமுருகன், காவேரி ERM 3384 கோடி ரூபாய்க்கு  கடன் வாங்கி கட்டினீர்கள். கடன் வாங்கி காட்டக்கூடாதோ, கட்டலாம். இல்லையென்று சொல்லவில்லை. நபார்டில் NDA என ஒரு பிரிவு இருக்கு. அவன் வட்டிக்கு மேல வட்டி போடும்…. மீட்டர் வட்டிக்காரனுக்கு மேல மீட்டர் வட்டிகாரன்.

சிரிக்கிறார் பாருங்க முன்னாள் முதலமைச்சர். இவுங்க என்ன செய்தார்கள். சரி வான்குடா கடனை என சொல்லி வாங்கிட்டாங்க.எவ்வளவு தெரியுமா வட்டி ? இதற்க்கு 7.8 சதவீதம் வட்டி. அப்படின்னா என்ன அர்த்தம் ? இதையெல்லாம் கூட்டி பார்த்தோமென்றால் 4 ஆயிரத்து 323 கோடி ஆகுது. இந்த 4,323கோடிக்கு மாசம் எவ்வளவு கட்டவேண்டும் என்று தெரியுமா ?

14 கோடி வட்டி கட்டணும் மாதம் மாதம்…. நீங்கள் வாங்கி வச்சுட்டு, போயிட்டீங்க. 14 கோடி வட்டியை நாங்கள் கட்டிக் கொண்டு இருக்கின்றோம்.எங்களுடைய முயற்சியால் கொஞ்சம் குறைந்த வட்டி உள்ளவன் எவனாவது இருந்தால் பார்த்து வாங்கணும். தண்ணிய கெடுப்பது, விவசாயத்தை கொடுப்பது கருவேலமரம் தான்.

இதை வைக்கூடாதுனு நான் முன்னாடி மந்திரியா இருக்கும் போதே சண்டை போட்டேன். அப்போது விவசாய மந்திரி வீரபாண்டி ஆறுமுகம். அப்போது ஜப்பான்காரன் 500 கோடி கொடுத்தான் மரம் வையுங்க என்று… அதனை வாங்கி நட்டு வச்சுட்டாரு எங்கே பார்த்தாலும்…. இன்னைக்கு அதனால் தண்ணீர் கெட்டு போய், முள்ளு நீளமாக வருது.

விவசாயிகள் ஈரக் காலில் மிதிக்கின்றார்கள். ஒவ்வொரு காலிலும் ரணமாகி ஆபரேஷனில் இருக்கின்றார்கள். ஆகையினாலே யார் யாரெல்லாம் வேலை பார்க்கவேண்டும்,  நிர்வாகம் பார்க்கிறீர்களோ  அவர்களுக்கெல்லாம் ஏதேனும் பரிசு கொடுக்கலாம். கருவேல மரங்களை  ஒவ்வொரு தொகுதியிலும் நீங்கள் அகற்றுவதற்கான   நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |