Categories
அரசியல் மாநில செய்திகள்

“பெரிய வெங்காயம் போன்றது திமுக”…. உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது…. பாஜக அண்ணாமலை….!!!!

திமுக பெரிய வெங்காயம் போன்றது, உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் திராவிட மாயை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசுகையில், 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். அதை யாராலும் தடுக்க முடியாது. கடந்த இரண்டு வருடங்களாக நான் அரசியலுக்கு வந்த காலத்தில் இருந்து கவனித்து பார்த்ததில் திராவிட ஆட்சி ஒரு கூடாரம் போல செயல்பட்டு வருகின்றது.

திமுகவை அளிப்பது என்பது மிகவும் சுலபமான வேலை. சக்கரவியூகம் போல செயல்பட்டு வருகின்றது. திமுக பெரிய வெங்காயம் போன்றது. உரிக்க உரிக்க உள்ளே ஒன்றுமே இருக்காது. தமிழகத்தில் மக்கள் அதிக அளவில் தற்போது கேள்விகளை கேட்க ஆரம்பித்துள்ளனர். பேய் வரும் காலங்களில் மக்களைத் தொடர்ந்து ஏமாற்ற முடியாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |