ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஐபோன் மாடலின் அம்சங்கள் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபோன் 15 மாடலில் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் ஆப்பிள் இதவரை தனது சாதனங்களிலும் பயன்படுத்த வில்லை. ஆனால் ஆப்பிளுக்கு போட்டியாக உள்ள சாம்சங் நிறுவனம் தங்களது ஸ்மார்ட்போன்களில் இந்த அம்சத்தை ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது. எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆப்பிள் நிறுவனம் பெரிய நிறுவனம் ஒன்றுடன் இணைந்துள்ளது.
இந்த நிறுவனம் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்க உள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன் 15 மாடல்களில் இந்த பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ்கள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து தென்கொரியாவை சேர்ந்த உற்பத்தியாளர்கள் இந்திய மதிப்பில் 1188.9 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலையை தென்கொரியாவின் குமி பகுதியில் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.