Categories
மாநில செய்திகள்

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர்…. வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு… வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.அதன்படி தொடர் மழை காரணமாக வைகை ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,553கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1.5 அடி உயர்ந்து 66.83 அடியாக உள்ளது. ஏற்கனவே கடந்த ஒரு மாதமாக 1100 கன அடி நீர் வைகை அணையில் இருந்து மதுரை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு திறக்கப்பட்டுள்ள நிலையில் தேனி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக அந்த மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து வைகை ஆற்றில் வடிந்து வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

இன்றைய நிலவரப்படி வைகை அணையிலிருந்து 569 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தரைப்பாலத்தில் இரு பகுதிகளிலும் தற்காலிகத் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மதுரை மாவட்ட ஆட்சியர் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.வைகை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வைகை ஆற்றில் அதிகமான நீர் வெளியேறி வருவதன் காரணமாக பொதுமக்கள் யாரும் வைகை ஆற்றில் இறங்கி குளிப்பது மற்றும் கால்நடைகளை மேய்ப்பது போன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |