பெருத்த வயிறு பிரச்சனை உள்ளவர்களுக்கு எளிமையான முறையில் வீட்டிலே செய்யக்கூடிய ஒரு டிப்ஸ்,, ட்ரை பண்ணி பாருங்க..!
எளிமையான வீட்டு வைத்தியம் நிறைய பேருக்கு உடல் பருமன் அதிகமாக இருக்கும். அப்படி பட்டவர்களுக்கு பெருத்த வயிறு பிரச்சனை அதிகமாகவே இருக்கும். சிலர் ஒல்லியாக இருப்பார்கள் அவர்களுக்கும் பெருத்த வயிறு இருக்கும். இதுதவிர வாயுத்தொல்லை இருப்பவர்களுக்கும் வயிறு உப்புசமாக இருக்கும். பெருத்த வயிறு பிரச்சனை உள்ளவர்களுக்கு எல்லோருக்குமே ஒரு எளிமையான டிப்ஸாக இருக்கும்.
ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். பெரிய நெல்லிக்காய் சின்ன, சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். பின் அதனை இடித்து சாறாக்கி கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அதோடு நாம் எடுத்து இடித்து வைத்திருக்கும் நெல்லிக்காய் சாற்றையும் சேர்த்து நன்றாக கலக்குங்கள்.
இப்பொழுது இது இரண்டு நிமிடம் நன்றாக கொதிக்க விடுங்கள். நன்றாக கொதித்த பிறகு அதை மிதமான சூடாக ஆற வைத்து , ஒரு டம்ளரில் வடிகட்டி அதோடு ஒரு ஸ்பூன் அளவிற்கு தேன் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இதை தினமும் இரவில் குடித்து வாருங்கள். உங்களுக்கு இருக்கும் பெருத்த வயிறு குறையும் .சாப்பிட்ட பின் அரை மணி நேரம் கழித்து இதை ஒரு டம்ளர் தினமும் இரவு குடித்து வாருங்கள்.