சுவிஸ் நகரமான ஜெனீவாவில் நேற்று பெருந்திரளான இலங்கையர்கள் கூடி பேரணி ஒன்றை நடத்தினார்கள்.
இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் எதிர்ப்பு தெரிவிப்போரை அவமதித்தல் ஆகியவற்றிற்கு நீதி கோரி, ஐரோப்பாவில் வாழும் இலங்கையர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றோர் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகலம் முன்பு கூடி பேரணி ஒன்றை நடத்தினார்கள்.
இதனை தொடர்ந்து நேற்று மதியம் 12.00 மணியளவில், இத்தாலி, பெல்ஜியம், பிரான்ஸ், பிரித்தானிய, ஜேர்மனி, ஸ்வீடன் மற்றும் ஸ்விட்சர்லாந்தில் வாழும் இலங்கையர்கள் ஏராளமானோர் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் முன்பு கூடினார்கள். மேலும் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் எதிர்ப்பு தெரிவிப்போரை அவமதித்தல் ஆகியவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி, பதாகைகளை ஏந்திய அவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.