Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெருந்துரை அருகே மூடப்பட்ட கிணறு… “தோண்டியபோது கண்டெடுக்கப்பட்ட 3 கற்சிலைகள்”…. மீண்டும் தோண்ட வருவாய்த்துறை தடை…!!!!

மூடப்பட்ட கிணற்றை தோண்டியபோது 3 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சந்தைப்பேட்டை பெரியகுளம் என்ற பகுதியில் விஜயபுரி அம்மன் கோவில் இருக்கின்ற நிலையில் திருவிழாவின் பொழுது இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிணற்றுக்கு சென்று தீர்த்தத்திற்காக தண்ணீர் எடுத்து வருவர். இந்த கிணறு பாழடைந்துவிட்டதால் பல வருடங்களாக தீர்த்தம் எடுக்க செல்லவில்லை. பின் அது மண்ணை போட்டு மூடப்பட்டு விட்டது. இந்த நிலையில் கோவிலில் ஒருவருக்கு சாமி வந்து கோவில் கிணற்றுக்குள் சாமி சிலைகள் இருப்பதாகவும் தோன்றி எடுக்குமாறும் கூறியுள்ளதாக செல்லப்படுகின்றது.

இதையடுத்து மக்கள் நேற்று முன்தினம் அந்த கிணற்றை தோண்டியுள்ளனர். 10 அடி தோன்றிய பொழுது கிணற்றின் பக்கவாட்டிலிருந்து குழலூதும் கண்ணன் சிலை, இரண்டு அன்ன பறவைகளின் கற்சிலை, இரண்டு பெண் தெய்வங்களுடன் கூடிய ஆண் காவல் தெய்வத்தின் இலை உள்ளிட்டவை தெரிந்ததை அடுத்து மூன்று சிலைகள் மேலே கொண்டு வரப்பட்டது. இச்செய்தி ஊர் முழுக்க பரவ இதுபற்றி தகவல் அறிந்து பெருந்துறை தாசில்தார் குமரேசன், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், போலீஸார் உள்ளிட்டோர் அங்கு வந்து உரிய உரிய அனுமதி இல்லாமல் இனி கிணறு தோன்றக் கூடாது எனவும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சில சிலைகள் பழங்காலத்தில் செதுக்கப்பட்டவையா என தெரிந்து கொள்வதற்காக தொல்பொருள் ஆய்வாளர்கள் இங்கு வந்த ஆய்வு நடத்துவார்கள் எனவும் அதுவரை சிலைகளை யாரும் எடுத்துச் செல்லக் கூடாது எனவும் கூறினார்கள். அதனால் சிலைகள் அங்கேயே போடப்பட்டது.

Categories

Tech |