இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், நாளைய தினம் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும், சென்றாயப்பெருமாள் கோயிலிலிருந்து என்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கின்றேன்.
என்னுடைய சொந்த தொகுதியிலே உள்ள அந்த கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துவிட்டு, தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கின்றோம். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்துள்ளார்கள். அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கட்சியின் சார்பாக, கழக உடன்பிறப்புகள், எங்களுடைய ஒன்றிய கழகச் செயலாளர்களோடு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்க, நாள் குறைவாக இருக்கின்ற காரணத்தினால் நங்கவள்ளி ஒன்றியத்தில் என்னுடைய பிரசாரத்தை தொடங்குகின்றோம் என முதல்வர் தெரிவித்தார்.