தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி காலை முதல் தொடர்ந்து முன்னிலை பெற்றுவருகிறது. பெரும்பான்மையான தொகுதிகளில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகளுடன் முன்னணி வகித்து வருகின்றனர்.
இதையடுத்து அறுதிப் பெரும்பான்மையுடன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சியமைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதால் அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மத்தியில் உற்சாகமாக கொண்டாடிவருகிறார்கள். #முகஸ்டாலின்எனும்நான் என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் டிரெண்டிங்கில் உள்ளது.