Categories
மாநில செய்திகள்

பெரும்பாலான தொகுதிகளில்… அதிமுக தான் நிற்கும்… அமைச்சர் விளக்கம்…!!!

எங்களைப் பொறுத்தவரை இந்த கூட்டணியில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக தான் தேர்தலை சந்திக்கும் என்று அமைச்சர் . கூறியுள்ளார்.

சென்னையை அடுத்துள்ள திருவேற்காட்டில் அரசு சார்பாக கட்டப்பட்டு வருகின்ற கட்டிடங்களை அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, “அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த கூட்டணி கட்டாயம்  அதிமுக தலைமையில் தான் அமையும்.

கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து முடிவு எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தால் அது அவர்களின் உரிமை. எங்களைப் பொறுத்தவரையில் இந்த கூட்டணியில் பெருவாரியான தொகுதிகளில் அதிமுக கட்சி தான் தேர்தலை சந்திக்கும். அதனால் கூட்டணியின் முதல்வராக அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தான் இருப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது”என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |