Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெரும்பாலான பேருந்துகள் திடீர் நிறுத்தம்… மக்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்பட்டு வந்த 70 மினி பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி போக்குவரத்து சேவை தொடங்கியது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பேருந்துகளில் மக்கள் பயணம் செய்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.

இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்பட்டு வந்த மினி பஸ்களில் 70 மினி பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 185 மினி பஸ்கள் தற்போது உள்ள நிலையில், அவற்றில் 115 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மினி பஸ்களில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லாததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் 70 மினி பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டால் மினி பஸ்கள் முழுமையாக இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |