Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெரும் அச்சம்…. இரை தேடி சென்றபோது… பர்கூர் மலைப்பகுதியில்… விவசாயியை கடித்த கரடி…!!

பர்கூர் மலைப்பகுதியில் விவசாயியை கரடி கடித்து குதறிய சம்பவம் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகில் பர்கூர் மலைப்பகுதி ஒன்று உள்ளது. இந்த மலைப்பகுதியில் உள்ள சோளகனை என்ற கிராமத்தில் ஈரையன்(50) என்பவர் வசித்து வருகின்றார். இவர் விவசாயி, ஆடு மாடுகளை வளர்த்து வருகின்றார். இவர் ஆடு மாட்டிற்காக  வனப்பகுதியை ஒட்டியுள்ள மேய்ச்சல் நிலங்களுக்கு சென்று இரையை கொண்டுவருவது வழக்கம். அதேபோல் நேற்று இரையை கொண்டு வருவதற்காக ஈரையன் வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது செடியின் உள்ளே ஒரு கரடி மறைந்து இருந்தது. ஈரையனை பார்த்ததும் ஒடி வந்து இவர் மீது பாய்ந்து கைகால்களை கடித்து குதறியுள்ளது.

இதனால் அவர் வலி தாங்க முடியாமல் “ஐயோ அம்மா” என்று கத்தி சத்தம் போட்டார். அப்போது இந்த சத்தத்தை கேட்டு சற்று தூரத்தில் இருந்த தொழிலாளர்கள் விரைந்து வந்து கல், கம்புகளை எடுத்து வீசி கரடியை துரத்தி விட்டனர். இதையடுத்து ஈரையனை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். கால்நடைகளுக்கு இரையை தேடி சென்ற விவசாயியை கரடி தாக்கியதால் அப்பகுதி விவசாயிகள் பயத்தில் உள்ளனர்.

 

Categories

Tech |