நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய்த்தொற்றை தடுக்க தடுப்பூசி ஒன்றுதான் ஒரே வழி என்றாலும், கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல் போன்றவற்றை அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. இதனால் மக்கள் எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் முக கவசம் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் பயன்படுத்திய குப்பையில் எறியப்பட்ட மாஸ்க்கை கழுவி மீண்டும் விற்பனைக்கு அடுக்கி வைப்பது அம்பலமாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிபிஇ கிட், கையுறை, மாஸ்க் ஆகியவற்றை கழுவி விற்பனைக்கு வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.