சாதிய வன்மத்துடன் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் வீடியோவில் பந்துவீச்சாளர் யுவேந்திர சஹலுடன் பேசியபோது சாதி ரீதியிலான சில வார்த்தைகளை யுவராஜ் சிங் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஹரியானா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் யுவராஜ் சிங்கை கைது செய்ததாகவும், சில மணி நேரத்திற்கு பின்னர் ஜாமீனில் விடுவித்ததாகவும் ஹரியானாவில் கன்சி பகுதி காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். முன்னதாக தனது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக யுவராஜ் சிங் கூறியிருந்தார்.