நிவர் பெரும் ஆபத்தாக மாறி வருவதாக அரசு பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக சென்னை கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இந்தப் புயல் நாளை ( இன்று ) தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. மேலும் இன்று பிற்பகல் காரைக்கால் மாவட்டம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புயல் நெருங்கி வருவதால் கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும் பொது மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது மிக அதி தீவிர புயலாக நிவர் கரையை கடக்கும் என்று சென்னை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 145 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் புயல் பாதிப்பு மீட்பு பணிக்காக 12 தேசிய பேரிடர் மீட்பு குழுவும், 4,377 முகாம்களும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது