பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வூஹான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலை துவங்கியுள்ளது. பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 15,622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 343 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,298,395 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒரு லட்சம் பேருக்கு 307 பேர் என்ற விகிதத்தில் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது. ஒரு லட்சம் பேருக்கு 200 என்ற விகிதத்தில் அதிகரித்தால் கடுமையான அபாய எச்சரிக்கை என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இந்த வேகத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஐரோப்பிய நாடு கடுமையான ஆபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.