Categories
தேசிய செய்திகள்

பெரும் ஆபத்து…! போதைப்பொருள் கடத்தலில் கல்லூரி மாணவிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில் முக்கியமாக இந்த போதைப்பொருள் கடத்தலில் கல்லூரி மாணவியர் உட்பட பெண்கள் ஈடுபட்டு வருவது அதிர்ச்சி அளித்துள்ளது.

கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கேரளாவில் போதை பொருள் கடத்தலில் பெண்கள் ஈடுபட்டு வருவது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு விசாரணையில்,இந்த கடத்தலில்  பெண்கள் அதிகம் ஈடுபட்டு வருவதாக மாநில கலால் துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இது குறித்த  விசாரணையில் வெளிமாநிலங்களில் இருந்து குறிப்பாக கர்நாடக மாநிலத்திலிருந்து எம். டி. எம் .ஏ. என்ற போதை பொருள் வகை அதிகளவு கேரளாவுக்கு கடத்தி வரப்படுவதாக மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் கலால் துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர் .இளம்பெண்கள் இந்த கடத்தலில் அதிகமாக ஈடுபடுத்தப்படுவதாகவும்  மற்றும்  20-25 வயதுக்குட்பட்ட வேலை பார்க்கும் பெண்கள், விடுதியில் தங்கி உயர்கல்வி பயிலும் மாணவிகள் அதிகமாக ஈடுபடுத்தப்படுகின்றனர்.

போதைப் பொருளை விற்பனை செய்யும் கும்பல், இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து போதைப்பொருள் பழக்கம் உள்ள பெண்களை இந்த கடத்தலுக்கு பயன்படுத்துகிறது. இந்த போதை பொருட்களை கர்நாடகாவில் இருந்து சாலை வழியாக பெண்கள் கடத்தி வருகின்றனர். இந்த கடத்தல் சோதனையில் 18 இளம் பெண்கள் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் போலீசார் கையில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவியர் அதிகம் சிக்குகின்றனர்.

இவர்கள் அதிக நேரம் படிப்பதால் ஏற்படும் சோர்விலிருந்து விடுபட போதை பொருளை பயன்படுத்தி மேலும் அதற்கு அடிமை ஆகியும் விடுகின்றனர். இவர்கள் போதைப் பொருளை பெறுவதற்காக அந்த கும்பல் சொல்வதை எல்லாம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர் என்று அவர் கூறினார்.

Categories

Tech |