அலுவலக கோப்புகளை இ-ஆபிஸ் மூலம் அனுப்பி வைத்து கோவை மாவட்ட காவல்துறையினர் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
தமிழக அரசு கடந்த 2020ஆம் ஆண்டு கணினி மூலம் கடிதம் ஆவணங்களை அனுப்பும் இ-கவர்ன ன்ஸ் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களின் துறைகளில் காகிதங்கள் பயன்பாட்டினால் செலவு அதிகமாக ஏற்பட்டது. இந்த செலவை குறைக்கும் விதத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பல்வேறு துறைகள் பயனடைகின்றன.
கணினியில் இ-ஆபீஸ் என்று தனி மென்பொருள் மூலம் அலுவலக பயன்பாட்டின் ஏடுகள் அனைத்தும் அனுப்பலாம். இந்த ஏடுகள் அனுப்புவதில் சிறந்து விளங்கும் துறைக்கு மாநிலளவில் அரசு சான்றிதழ் வழங்க படுக்கின்றது.இதில் மாநில அளவில் கோவை மாவட்ட போலீசார் அலுவலக ஏடுகளை இ-ஆபீஸ் மூலம் அனுப்பி வைத்து முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இதற்கு சென்னை டிஜிபி அலுவலகத்திலிருந்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் க்கு ஈமெயில் மூலம் அரசு சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டு பாராட்டினார்கள். இந்த விருது பெற காரணமாக இருந்த பணியாளர்களை பாராட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் செல்வ நாகரத்தினம் பரிசு வழங்கினர்.