செட்டி குளக்கரையில் கீழே விழுந்த மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகில் ஆசூர் கிராமத்தில் வசித்து வந்தவர் 40 வயதுடைய ராகவன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே டிராக்டர் மெக்கானிக் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஆலங்குடி சந்தப்பேட்டை அருகே உள்ள சித்தி விநாயகர் கோவில் குளக்கரையில் குளிக்க போனார். அப்போது குளக்கரை படியில் கால் வழுக்கி கீழே விழுந்ததில் தலையில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இத்தகவலை அறிந்த ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராகவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.